கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்றவர் எவரோ; ஆனால், அது உண்மை தான்...' என்று கூறி, நண்பர் ஒருவர் கூறியது:
பெட்டி, படுக்கைகளை உற்று உற்றுப் பார்க்கிறவன், திருடனாக இருக்க வேண்டுமென்பதில்லை; திருட்டுக் கொடுத்து விட்டுத் தேடுகிறவனாகவும் இருக்கலாம்.
இருமிக் கொண்டிருப்பவன் நோயாளியாக இருக்க வேண்டுமென்பதில்லை; டாக்டராகவும் இருக்கலாம்.
வகுப்பில் முன் வரிசையில் உட்காருவதால் மட்டும் ஒருவன் புத்திசாலி என்பதில்லை; காது கோளாறு காரணமாகவும் இருக்கலாம்.
சுவரை வெள்ளையடிப்பது, அதைத் தூய்மைப்படுத்தத்தான் என்பதில்லை; கண்ட விளம்பரங்கள் எழுதி அசிங்கப்படுத்தவும் இருக்கலாம்.
முதலாளி தொழிலாளியைத் திட்டுவது அவன் குற்றம் செய்து விட்டதற்காக என்பதல்ல; சம்பள உயர்வு கேட்டதற்காகவும் இருக்கலாம்.
விமானம் ஏறுபவன் வெளிநாடு செல்கிறான் என்பதில்லை; 'ஹைஜாக்' செய்யவும் இருக்கலாம்.
— நண்பரின் புதுமொழிகள் எப்படி?
நன்றி தினமலர்

1 comment:
புது மொழிகள் மனதை ஹை ஜாக் செய்து விட்டன !
Post a Comment